Search This Blog
Thursday, 30 May 2013
மொழிகள் தொடர்பான தகவல்கள் - உங்களுக்கு!
உலக அளவில் 6500க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் சுமார் 2000 மொழிகள் 1000த்திற்கும் குறைவான மக்கள் தொகையினரால் மட்டுமே பேசப்படுகின்றன.
உலகில் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகையினரால் பேசப்படும் மொழிகள் 13 மட்டுமே ஆகும். அவை, மண்டேரியன் சீனம், ஆங்கிலம், ஹிந்தி, ஸ்பெயின், ரஷ்ய மொழி, அரபு, வங்காள மொழி, போர்த்துகீசிய மொழி, மலாய் இந்தோனேசியா மொழி, பிரெஞ்சு மொழி, ஜப்பானிய மொழி, ஜெர்மனிய மொழி மற்றும் உருது ஆகியனவாகும்.
உலகில் அதிக மக்கள் தொகையினரால் பேசப்படுகின்ற மண்டேரியன் சீன மொழியானது 6000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். உலகில் 6 மொழிகளே பழமையான மொழிகள் அவை, தமிழ் மொழி, அரபு மொழி, சீன மொழி, சமஸ்கிருத மொழி, கிரேக்க மொழி, இலத்தீன் மொழி.
உலகில் இலத்தீன் மொழியினை ஆட்சி மொழியாகக் கொண்ட ஒரே நாடு வத்திக்கான் ஆகும்.
உலகில் அதிக மொழிகள் பேசப்படுகின்ற நாடு பவுவா நியூ கினியா ஆகும். பசுபிக் சமுத்திரத்தின் தென் மேற்கே அமைந்துள்ள இந்த நாட்டில் 850-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன.
ஆப்பிரிக்காவில் 2000-க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. இதில் 80 சதவீத மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. உலகில் பேசப்படுகின்றன மொழிகளில் பாதிக்கும் மேற்பட்ட மொழிகள் ஆசியாவிலும், பசுபிக் தீவுகளிலும் பேசப்படுகின்றன.
Labels:
உலகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment