Search This Blog

Monday 5 January 2015

7 நாட்களில் 5 நாட்கள் சைவ உணவு அவசியம்!


வாரத்தில் 5 நாட்களுக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக்கொண்டால் உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயனங்களை குறைக்கலாம் என்று கொரிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தென்கொரிய விஞ்ஞானிகள் குழுவினர் உடல் நலனில் காய்கறிகளின் பங்கு பற்றி விரிவாக ஆராய்ந்தனர்.

அதற்காக ஒரு குழுவை தேர்வு செய்து அவர்களை கோயில் ஒன்றில் தங்க வைத்தனர். அவர்களுக்கு சைவ உணவை வழங்கப்பட்டது.. இந்த ஆய்வுக்கு முன்பும் அவர்களின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டது. பின்னர் 5 நாட்களுக்கு பிறகும் குழுவினரின் சிறுநீர் பரிசோதிக்கப்பட்டது. கோயிலில் தங்கி சைவ உணவை மட்டுமே சாப்பிட்ட பிறகு எடுக்கப்பட்ட பரிசோதனையில் உடலில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயன சுரப்பு குறைந்திருந்தது தெரிய வந்தது.

வாரத்தின் மீதி நாட்களில் அசைவ உணவுகள், கொறிக்கும் வகையில், சாப்பிட அனுமதிக்கப்பட்டது. அசைவ உணவுகளை சாப்பிட்ட பிறகு எடுக்கப்பட்ட சிறுநீர் பரிசோதனையில் விஷத்தன்மை ஏற்படுத்தும் ரசாயன சுரப்பு குறைந்திருந்தது தெரியவந்தது. எனவே வாரத்ததில் குறைந்தபட்சம் 5நாட்கள் காய்கறிகள் சேர்ந்த சைவ உணவு அவசியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது பற்றி ஆய்வு செய்த ஆராய்ச்சிக்குழு ஆய்வாளர் கூறுகையில் சைவ அசைவ உணவுகளால் உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் சிறுநீர் பரிசோதனையில் உடனுக்குடன் தெரிகின்றது. ரசாயன சுரப்பை குறைத்து உடல் ஆரோக்கியத்தை காக்க வாரத்தில் 5நாட்கள் காய்கறிகள் கலந்த சைவ உணவு அவசியம் என்கின்றனர்.

கேழ்வரகு தோசை - சமையல்!

 

 தேவையானவை:


 கேழ்வரகு மாவு - 1 கப்,

ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு - அரை கப்,

உப்பு - தேவைக்கேற்ப,

சின்ன வெங்காயம் - 15,

பச்சை மிளகாய் - 2,

சீரகம் - அரை டீஸ்பூன்,

எண்ணெய் - தேவையான அளவு.


செய்முறை:


கேழ்வரகு மாவு, ஆட்டிய உளுத்தம்பருப்பு மாவு, உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து மறுநாள் வரை பொங்க விடவும் (12 மணி நேரம்).


 வெங்காயத்தை பொடியாகவும் பச்சை மிளகாயை சிறு வளையங்களாகவும் நறுக்கவும்.


மறுநாள் காலையில் மாவை நன்றாக கலக்கி விட்டு அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, சீரகத்தை தேய்த்துப் போட்டு தோசைக்கல்லை காயவைத்து மெல்லிய தோசைகளாக ஊற்றி சூடாக இருக்கும்போதே பரிமாறவும்


. இதற்கு காரச் சட்னி ஏற்ற ஜோடி.

பூண்டு சூப் - சமையல்!



தேவையானவை:

முழுப்பூண்டு – 2 ...
 
வெங்காயம் – ஒன்று
 
தண்ணீர் – அரை லிட்டர்
 
சோள மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
 
பால் – ஒரு கப்
 
கெட்டித் தயிர் – சிறிதளவு
 
ஆலிவ் ஆயில் – ஒரு டேபிள்ஸ்பூன்
 
மிளகுத் தூள், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

*பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும்.

* வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடாக்கி, உரித்த பூண்டு சேர்த்து நன்கு வறுக்கவும்.

* இதில் சிறிது எடுத்து தனியே வைக்கவும்.

* நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

* சோள மாவு சேர்த்து வறுத்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கட்டிஇல்லாமல் கிளறி, தண்ணீரை சேர்த்து கொதிக்கவிடவும்.

* பூண்டு நன்கு வெந்தவுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி வடிகட்டி, தனியாக எடுத்து வைத்த வறுத்த பூண்டு, தயிர் சேர்த்துப் பரிமாறவும்.

* இந்த சூப் வயிறு உபாதை உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.

எப்படி சாப்பிட வேண்டும்?


‘ஸ்பா’ என்று சொன்னதுமே இளசுகளின் புத்துணர்ச்சி மையம் என்று சட்டென்று சொல்லிவிடுவீர்கள். சென்னையில் பிரபல நட்சத்திர ஹோட்டல்களிலும், அழகு நிலையங்களிலும் ஸ்பா கலாசாரம் வேகமாகப் பரவி வருகிறது. சரி, இந்த ‘ஸ்பா’வை முதன்முதலில் இந்தியாவில்அறிமுகப்படுத்தியவர் யார் தெரியுமா?

அசோக் கண்ணா. இவர்தான் ‘ஸ்பா’மகன்! அமெரிக்காவில் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்தவர். பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் உயர் பொறுப்புகளில் இருந்தவர். 1999ம் ஆண்டு சுபயோக சுபதினத்தில் இமாசலப் பிரதேசத்தில் டெஸ்டினேஷன் ஸ்பாவான ‘ஆனந்தா’வை தொடங்கினார். உலகம் சுற்றும் வாலிபனாக பறந்துகொண்டிருக்கும் இவர், சமீபத்தில் சென்னை வந்திருந்தார்.

‘‘அவசர வாழ்க்கைக்குப் பழகிட்டோம். இந்த வேகத்துலேந்து சில நாட்களாவது தப்பிக்க முடியுமான்னு யோசிக்கிறோம் இல்லையா? அவங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் ‘ஸ்பா’. இதுவெறும் அழகு நிலையம், நீராவிக்குளியல், மசாஜ் மட்டும் கிடையாது. ஆயுர்வேத, அரோமாதெரபி சிகிச்சையோட நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்னு பஞ்ச பூதங்களின் சக்திகளை ஒருங்கிணைச்சு மனசையும், உடலையும் சுத்தப்படுத்தறதுதான் ‘ஸ்பா’.

 >> ஒவ்வொருவரும் உணவை எப்படி பிரிச்சு சாப்பிடனும்னு ஒரு வரைமுறை இருக்கு. அதன்படி செஞ்சா, உடலும் மனசும் ஆரோக்கியமா இருக்கும்.

 >> மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை சாப்பிடவும்.

 >> ஒவ்வொரு முறை சாப்பிடும்போதும் வயிறு முட்ட சாப்பிடக் கூடாது.

 >> ஒரு முறை சாப்பிட்டதும், அந்த உணவு நல்லா செரிமானம் ஆன பிறகுதான் அடுத்த வேலைக்கான உணவை எடுத்துக்கனும்.

 >> புரதம், நார்ச்சத்து மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுவது அவசியம்.

 >> உப்பு அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். ஏன்னா, கொழுப்புள்ள உணவை சாப்பிடனும்ங்கற ஆர்வத்தைத் தூண்டுவது உப்புதான்.

 >> கார்போஹைட்ரேட் அதிகமிருக்கிற அரிசி உணவை குறைச்சலா சாப்பிடவும்.

 >> பச்சைக் காய்கறிகளை தினமும் மூனு வேலையும் சாப்பிடறது நல்லது. நான்கைந்து பழங்களை ஒண்ணா சேர்த்து சாப்பிடக் கூடாது.

 >> உணவுக்கு அரை மணிநேரம் முன்னாடி பழம் சாப்பிடலாம். அல்லது உணவு சாப்பிட்ட 2 மணி நேரங்கள் கழிச்சு பழங்களை சாப்பிடலாம். ‘ஸ்பா’ எடுத்துக் கொள்ள பர்ஸ் தடுத்தாலும் இந்த வழிமுறைகளை உணவில் பின்பற்றலாமே?

பால் கொழுக்கட்டை - சமையல்!


 Paccarici flour with salt, hot pudding and mashed scroll to the terms.

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு - 1/2 கப்,
பொடித்த வெல்லம் - 1/2 கப்,
தேங்காய் - 1/2 மூடி,
ஏலக்காய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - சிறிது.


எப்படிச் செய்வது?


பச்சரிசி மாவில் உப்பு சேர்த்து, வெந்நீர் விட்டு கொழுக்கட்டை உருட்டும் பதத்துக்குப் பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக  உருட்டிக் கொள்ளவும். தேங்காய் துருவி, முதல் இரண்டு பால் தனித்தனியே எடுக்கவும். வெல்லத்தையும் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இரண்டாம்  தேங்காய் பாலில் கரைத்த வெல்லம் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிட்டு அதிலேயே உருட்டி வைத்துள்ள உருண்டைகளைப் போட்டு  வேகவிடவும். உருண்டைகள் வெந்ததும் முதல் பால் சேர்த்து ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கி, பின் பறிமாறவும்.