Search This Blog

Saturday 28 December 2013

அந்த மூன்றாம் நாள்





ஓர் இரவுநேரம் ஒருவன் தன் மூன்று வயது மகன் தூங்கிக்கொண்டிருக்கும் போது தன் மனைவியின் மேல்உள்ள கோபத்தில் அவளைக் கொன்று யாருக்கும் தெரியாமல் பிணத்தை புதைத்து விட்டான்

 மறுநாள் காலை மகன் எழுந்து அம்மாவைப் பற்றி கேட்டால் என்ன சொல்லி சமாளிப்பது என்று ஆலோசனை செய்தான்..

ஆனால் மகன் அம்மாவைப்பற்றி கேட்க வில்லை.

இரண்டாம் நாளாவது கேட்பான் என நினைத்தான்.ஆனாலும் கேட்கவில்லை.வழக்கம் போல மகன் சந்தோசமாக இருந்தான்.

மூன்றாம் நாள் மெதுவாக மகனிடம் பேச்சு கொடுத்தான்.

 "உனக்கு நம்ம வீட்ல எதாவது மாற்றம் தெரியுதா? எங்கிட்ட ஏதாவது கேக்கணும் போல இருந்தா கேளு"

மகன் மெல்லக்கேட்டான்:

 "மூணுநாளா அம்மா ஏன் உங்க பின்னாடியே நிக்கிறாங்கப்பா?"

சொல்லாதீர்கள்... கவிதை?



எங்களை இல்லாதவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் குறையாத வறுமையை
 வைத்துக்கொண்டிருக்கிறோம் நாங்கள்...!


எங்களை இயலாதவர்கள்
என்று சொல்லாதீர்கள்....
அடுத்தவருக்கு தெரியாமல்
 தனித்து அழமுடியும் எங்களால்..!


எங்களை வீரமற்றவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
பசியை எதிர்த்து போராடும்
 தைரியம் இருக்கிறது எங்களிடம்..!


எங்களை திக்கற்றவர்கள்
 என்று சொல்லாதீர்கள்....
எட்டுத்திக்கும் சூழ்ந்துக்கொண்டிருப்பது
 எங்கள் வறுமை ஜாதிதான்..!


எங்களை பாதுகாப்பில்லாதவர்கள்
 என்று சொல்லாதீர்கள்...
எப்போதும் எங்களுக்கு சூன்யமாய்
 குடைபிடித்துக்கொண்டிருக்கிறது வறுமை கோடு...

சமையலில் செய்யக்கூடாதவை… செய்ய வேண்டியவை….




சமையலில் செய்யக்கூடாதவை…

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.


செய்ய வேண்டியவை….

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்